வாங்சா மாஜூ LRT நிலையத்தில் பரபரப்பு! தண்டவாளத்தில் விழுந்த பயணி – ரயில் சேவை பாதிப்பு

வாங்சா மாஜூ LRT நிலையத்தில் பயணி ஒருவர் மயங்கி தண்டவாளத்தில் விழுந்ததாக Rapid KL தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) காலை 6.52 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக Platform Intrusion Emergency Stop (PIES) அமைப்பு உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு, தண்டவாளத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் கெலானா ஜெயா LRT பாதையில் சிறிது நேரம் ரயில் சேவை தாமதமானது.

தண்டவாளத்தில் விழுந்த பயணியை நிலைய ஊழியர்கள் மீட்டு, உடனடி சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது உதவி தேவைப்பட்டால், பயணிகள் துணை காவல்துறையினர் அல்லது நிலைய ஊழியர்களிடம் உதவி கோருமாறு Rapid KL அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ரயிலுக்காகக் காத்திருக்கும்போது பயணிகள் மஞ்சள் கோட்டுக்குப் பின்னால் நிற்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பகிருங்கள்: