மகாத்மா காந்தி கலாசாலையில் 46 மாணவர்களுக்குத் தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன

சுங்கை சிப்புட், நவம்பர் 5: பேராக், சுங்கை சிப்புட்டிலுள்ள மகாத்மா காந்தி கலாசாலை ஆரம்பப் பள்ளியில் பி40 பிரிவைச் சேர்ந்த 46 இந்திய மாணவர்களுக்குத் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ கி. இருதயநாதன் மாணவர்களுக்குப் புத்தாடைகளை வழங்கினார்.

மேலும், பள்ளி அறங்காவலர் திரு. ராமகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. செல்வராஜ் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்குப் புத்தாடைகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் தீபாவளிக் கொண்டாட்டம் மகிழ்ச்சியுடன் சிறப்பிக்கப்பட்டது.

பகிருங்கள்: