கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில், சுமார் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களைச் சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 26.6 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுகள் மற்றும் 24,000 லிட்டருக்கும் அதிகமான மதுபானங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறையின் ஓப்ஸ் A.S.A.P II நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் மொத்தம் 445 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு உதவி தலைமை இயக்குநர் ரைஸாம் செதாபா தெரிவித்தார்.
சுங்கவரி செலுத்தப்படாததாகச் சந்தேகிக்கப்படும் சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களின் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு மற்றும் அதற்கான சுங்கவரி, வரிகள் உட்பட மொத்தம் 25.77 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
