சிலாங்கூர், பண்டார் கண்ட்ரி ஹோம்ஸில் அமைந்துள்ள அன்னைyin கருணை இல்லம் (Annaiyin Karunai Illam), கல்வி வாய்ப்புகள் தேவைப்படும் 39 மாணவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
இந்த இல்லம், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவி செய்து வரும் நிலையில், அவர்களின் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்ய பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவை நாடுகிறது.
இதற்கிடையில், சமூக ஆர்வலர் மோகன் சின்னசாமி, இல்லத்திற்கு RM300 மதிப்பிலான அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் தீபாவளி ஆடைகளையும் வழங்கி உதவிக்கரம் நீட்டினார்.
39 மாணவர்களின் கல்விப் பயணம் தடையின்றித் தொடரவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிறிய உதவியும் ஒரு மாணவரின் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
உணவு, உடை மற்றும் கல்வி தொடர்பான உதவிகளை வழங்க விரும்புவோர் அன்னைyin கருணை இல்லத்தைத் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புக்கு: டாக்டர் ஜி. பெருமாள்
தொலைபேசி: 011-2359 9446



