ஒஸ்லோ: கண்ட ஐரோப்பாவிலிருந்து இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜெர்மனியின் ‘Spectrum’ ராக்கெட் வெற்றிகரமாக சுற்றுப்பாதையை எட்டியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய விண்வெளி ஏவுதல் துறையில் புதிய மைல்கல் ஏற்பட்டுள்ளது.
ஆளில்லா Spectrum ராக்கெட், நோர்வேயின் ஆர்க்டிக் பகுதியில் உள்ள Andøya Spaceport-இல் இருந்து ஏவப்பட்டது. இதில் 5 சிறிய செயற்கைக்கோள்களுடன் தொழில்நுட்ப பரிசோதனையும் இடம்பெற்றிருந்தது.
“நாம் சுற்றுப்பாதையை அடைந்துவிட்டோம்; ஐரோப்பிய வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளோம்” என ராக்கெட்டை உருவாக்கிய ஜெர்மனியின் Isar Aerospace நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது Isar நிறுவனத்தின் இரண்டாவது ஏவுதல் ஆகும். கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் ஏவுதல் தோல்வியடைந்து, ராக்கெட் கடலில் விழுந்து வெடித்தது. அப்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த வெற்றியானது ஐரோப்பாவிலிருந்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என நோர்வே தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் Cecilie Myrseth தெரிவித்துள்ளார்.
உலகளவில் செயற்கைக்கோள் ஏவுதல் துறையில் SpaceX மற்றும் ArianeGroup போன்ற நிறுவனங்கள் முன்னிலையில் உள்ள நிலையில், ஜெர்மனியின் Isar Aerospace நிறுவனமும் தற்போது போட்டியில் முக்கிய இடத்தைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், புதிய ராக்கெட்டுகள் மற்றும் ஏவுதள உள்கட்டமைப்பை மேம்படுத்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மூலம் சுமார் 200 மில்லியன் யூரோ நிதியுதவி கிடைத்துள்ளதாக Isar தெரிவித்துள்ளது.
