கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து கிட்டத்தட்ட RM3 மில்லியன் மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்களை கொள்ளையடித்துத் தப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் ஜாலான் அம்பாங்கில் உள்ள Pavilion Embassy குடியிருப்பில் இடம்பெற்றதாக Wangsa Maju மாவட்ட காவல்துறை தலைவர் Annas Sulaiman தெரிவித்தார்.
முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் கத்திகளுடன் வந்து, பாதிக்கப்பட்டவரின் கைபேசியையும் சேதப்படுத்தியதுடன், அவரது கடவுச்சீட்டையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
