தாசெக் பெரா ராம்சார் பகுதியில் அமலாக்கக் குழுவினருக்கு இடையூறு; 5 பேர் கைது

தாசெக் பெரா பாதுகாப்பு வனப்பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டு அமலாக்க நடவடிக்கையின்போது, அதிகாரிகளின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரா மாவட்ட காவல்துறை தலைவர் சூப்பிரிண்டெண்ட் ஸுல்கிஃப்லீ நஸீர் கூறுகையில், காலை சுமார் 10 மணியளவில் நடைபெற்ற நடவடிக்கையின்போது, சந்தேகநபர்கள் வனப்பகுதிக்குச் செல்லும் வழியில் தடைகளை அமைத்து, அமலாக்க அதிகாரிகளைத் தூண்டியதாகத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், அமலாக்க அதிகாரிகள் வனப்பகுதிக்குள் செல்ல சிலருடன் பேச்சுவார்த்தை நடத்துவது அதில் பதிவாகியுள்ளது.

இந்த வழக்கு, அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிக்கு தன்னிச்சையாக இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றவியல் சட்டத்தின் 186ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை, RM10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு நடவடிக்கை, தாசெக் பெரா வனப்பகுதியில் சட்டவிரோத பயிர்ச்செய்கைகளை அகற்றவும், நில ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படுகிறது.

பகிருங்கள்: