இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற Wonderland English Bees (WEB) சர்வதேச ஆங்கிலப் போட்டியில், மலேசியாவைச் சேர்ந்த SJK(T) Heawood பள்ளி மாணவி கேசவர்த்தினி கோபிநாத் சிறப்பான சாதனையைப் பதிவுசெய்துள்ளார்.
இப்போட்டியில் பங்கேற்ற அவர், Silver Medal – International Qualifier மற்றும் Bronze Medal ஆகிய பதக்கங்களைப் பெற்றதுடன், Global Finalist என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
மாணவியின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் திறமைக்குக் கிடைத்துள்ள இந்தச் சாதனை, SJK(T) Heawood பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பள்ளித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான போட்டியில் திறமையை வெளிப்படுத்திய கேசவர்த்தினி கோபிநாத்துக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
