2027-ல் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து: மலேசியாவுக்குக் குறைந்த தரவரிசை – MBSB

அமெரிக்கா – ஈரான் மோதலின் தாக்கம் விவசாய உற்பத்தியில் தாமதமாக வெளிப்படுவதால், 2027ஆம் ஆண்டு மலேசியாவின் உணவுப் பாதுகாப்புக்கு பெரும் சவால் ஏற்படக்கூடும் என MBSB Research தெரிவித்துள்ளது.

விவசாயிகள் உற்பத்தி முடிவுகளை பல மாதங்களுக்கு முன்பே எடுப்பதால், உரம், எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பது அடுத்த ஆண்டு குறைந்த விளைச்சல், விநியோகத் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் விலை உயர்வு காரணமாக உணவுப் பொதியிடல், சேமிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகளும் அதிகரிக்கக்கூடும்.

Resilient Food Systems Index-இல் மலேசியா 72.98 புள்ளிகளுடன் உலகளவில் 10ஆவது இடத்தில் இருந்தாலும், உணவு கிடைப்பனமையில் 62.04 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது.

அரிசியின் தன்னிறைவு விகிதம் 2024ஆம் ஆண்டில் 52.9 சதவீதமாக இருந்த நிலையில், ஆண்டுதோறும் சுமார் 1.5 முதல் 1.6 மில்லியன் டன் அரிசியை மலேசியா இறக்குமதி செய்கிறது.

வெங்காயம், பூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களும் அதிகளவில் இறக்குமதியையே சார்ந்துள்ளன.

இதனால், அதிக உற்பத்திச் செலவுகள், குறைந்த எதிர்கால விளைச்சல் மற்றும் சர்வதேச உணவு விநியோகத்திற்கான போட்டி ஆகியவை 2027-இல் மலேசியாவுக்கு முக்கிய சவால்களாக அமையக்கூடும் என MBSB Research எச்சரித்துள்ளது.

பகிருங்கள்: