மலேசியாவில் Waze செயலிக்குத் தடை! அரசுப் பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவு — பொதுமக்களுக்கும் முக்கிய வேண்டுகோள்!

கோலாலம்பூர், அக்டோபர் 22: மலேசியாவில் அரசுப் பணியாளர்கள் உத்தியோகபூர்வப் பணிகளின்போது Waze வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. தேசியப் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Waze செயலியை உருவாக்கிய நிறுவனம் இஸ்ரேலில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பயனர்களின் இருப்பிடம் மற்றும் பயண விவரங்கள் தொடர்பான பாதுகாப்புக் கவலைகள் எழுந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் தடை அரசுப் பணியாளர்களின் உத்தியோகபூர்வப் பயன்பாட்டிற்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்களுக்கு கட்டாயத் தடை இல்லை என்றும் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், பொதுமக்களும் Waze செயலிக்குப் பதிலாக மலேசியாவில் உருவாக்கப்பட்ட TuJu போன்ற உள்ளூர் வழிகாட்டிச் செயலிகளைப் பயன்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு மலேசியாவில் இணையப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த கவனத்தை அதிகரித்துள்ளது.

பகிருங்கள்: