சரவாக் மாநிலத் தேர்தல் டிசம்பர் 12ஆம் தேதி! நவம்பர் 28 வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கூச்சிங், நவம்பர் 6: சரவாக் மாநிலத்தின் 13ஆவது சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் (EC) அறிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்றும், முன்கூட்டிய வாக்குப்பதிவு டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.

இதன் மூலம் தேர்தல் பிரசாரத்துக்கு மொத்தம் 14 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்று கூச்சிங்கில் நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை அறிவித்தார்.

பகிருங்கள்: