பிரதமர் YAB டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள BUDI95 திட்டத்தின் கீழ் RON95 மானிய எரிபொருள் தகுதி, மாதத்திற்கு 200 லிட்டரில் இருந்து 300 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதன் மூலம் 16 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள், லிட்டருக்கு RM1.99 என்ற மானிய விலையில் 300 லிட்டர் வரை RON95 பெற முடியும்.
இந்த கூடுதல் 100 லிட்டர் தகுதி, தினசரி வேலைக்குச் செல்வோர், பள்ளிக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர், சிறு வணிகர்கள், Gig தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு முக்கிய உதவியாக அமையும்.
அதேபோல், தகுதியான 5 லட்சத்துக்கும் மேற்பட்ட டீசல் பிக்கப் மற்றும் ஜீப் வாகன உரிமையாளர்கள், BUDI Diesel திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 400 லிட்டர் வரை பெற உள்ளனர்.
இந்த முடிவு, மக்களின் வாழ்க்கைச் செலவு சுமையை கருத்தில் கொண்டு அரசு தனது கொள்கைகளைத் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கிறது என்பதைக் காட்டுகிறது.
