“பூவெல்லாம் கேட்டுப்பார்” – மலேசிய தமிழ் சினிமாவில் புதிய ஹாரர் திரில்லர் அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக வெளியாகியுள்ளது.
கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, கார்த்திக் ஷாமலன் மற்றும் டத்தின்ஷைலா நாயர் இணைந்து தயாரித்துள்ளனர். SCI FILMS மற்றும் SHAIBHA VISION நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான இப்படம், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் வெளியானது.
டத்தின் ஷைலா நாயர், யுவராஜ் கிருஷ்ணசாமி, ‘விகடகவி’ மகேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதையின் மையமாக, குற்றப் பின்னணி கொண்டவர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபடும் PhD மாணவி சத்யா, அவருடைய ஆய்வு உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மாறன் ஆகியோரின் சந்திப்பைத் தொடர்ந்து எதிர்பாராத சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை இயக்கம் மற்றும் எடிட்டிங் என தொழில்நுட்ப அம்சங்களிலும் படம் கவனம் ஈர்க்கிறது.
குறிப்பாக ‘விகடகவி’ மகேனின் மாறன் கதாபாத்திரம், அவரது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
முதல் பாதியில் நகைச்சுவையுடன் நகரும் படம், பின்னர் கதையின் முக்கிய பகுதிக்குள் சென்று வேகம் பெறுகிறது. மொத்தத்தில், ஹாரர் மற்றும் திரில்லர் ரசிகர்களுக்கு “பூவெல்லாம் கேட்டுப்பார்” ஒரு சுவாரஸ்யமான திரை அனுபவமாக அமைகிறது.
