சரவணன் மற்றும் குடும்பத்தினருக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்க MACC நடவடிக்கை

முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.

காலை 9.15 மணியளவில் சரவணன், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இரண்டு கருப்பு நிற Toyota Alphard மற்றும் Vellfire வாகனங்களில் MACC தலைமையகத்தை வந்தடைந்தார்.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான 1,000 ஒதுக்கீடுகளை TYKB Engineering Sdn Bhd நிறுவனத்திற்கு வழங்கிய விவகாரத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு RM1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாக சரவணன் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான சரவணன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து தான் குற்றமற்றவர் எனக் கூறினார்.

இந்நிலையில், சரவணன், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும் என MACC தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்த் ஹலிம் அமான் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

பகிருங்கள்: