கோலாலம்பூர், அக். 28: லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாடு செய்த தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சியில் சுமார் 600 பேர் நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர். இந்நிகழ்ச்சி இன்று IWK Eco Park-இல் நடைபெற்றது.
தொடர்பு அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில், தொடர்பு அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் மனோ வீரபத்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு பயனாளிக்கும் அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களை வாங்குவதற்கு RM150 மதிப்பிலான பல்பொருள் அங்காடி பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. இந்தப் பற்றுச்சீட்டுகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் 2026 நவம்பர் 18ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.
லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் சுமார் 1,600 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.
இத்திட்டத்தில் உதவி பெறுவோர் லெம்பா பந்தாய் தொகுதியின் வாக்காளர்களாக இருக்க வேண்டும். தகுதியை உறுதிப்படுத்த அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும்.




