பினாங்கில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சமய, சமூகச் சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்து சபா, ஆண்டு தோறும் தீபாவளி காலத்தில் வசதி குறைந்தவர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி வருகிறது. இவ்வாண்டு பி40 பிரிவில் உள்ள 80 குடும்பத்தினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்குகிறோம் என்றார் இந்து சபாவின் தலைவர் பரஞ்சோதி
பினாங்கு இந்து சபா இந்தியர்களின் பண்பாடு கலாச்சாரத்தை வளர்த்து வருகிறது. மாதம் ஒரு முறை சமயப் சொற்பொழிவு, திருமுறை, திருக்குறள் வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சபா மண்டபம் சீர் செய்யப்பட இருக்கிறது. அதன் பின்னர் இன்னும் இதுபோன்ற பல சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்துவோம் என இந்து சபாவின் தலைவர் பரஞ்சோதி சோணை முத்து தமதுரையில் கூறினார்.
117 ஆண்டுகளை கடந்த இந்து சபா எவ்வாறு இன்னும் வளர்ச்சி காண முடியும் என இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ். என். ராயர் பல் வகையான ஆலோசனைகள் எங்களுக்கு வழங்கியுள்ள அவருக்கு சபா நன்றி கூறுகிறது.
மடானி அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான தனது வரவு செலவு திட்டத்தில் இந்து ஆலயங்களின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் மட்டும் 80 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் தமிழ்ப் பள்ளிகளின் கட்டுமானத்திற்கும் மேம்பாட்டிற்கும் 50 மில்லியன் நிதியும் , மித்ரா வழியாக 150 மில்லியன் ரிங்கிட் இந்தியர்களுக்காக ஒதுக்கியுள்ளது என செலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். எஸ். என் . ராயர் தமதுரையில் கூறினார்.
நாடாளுமன்றத்தில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் இந்திய உறுப்பினர்கள் அனைவரும் இந்திய சமுதாயத்திற்குத் தேவையான சமூக நல உதவிகளை செய்து வருகிறோம். எங்களோடு உடனிருந்து பினாங்கு இந்து சபா பொதுமக்களுக்கு சேவையாற்றி வருவது பாராட்டுக்குரியது என இன்று காலை பத்து மணிக்கு, , பினாங்கு இந்து சபா அலுவலக ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
இந்து என்பது அழிக்க முடியாத ஒரு இயக்கம். சிலர் இந்துவாக நடித்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். கூடவே இருந்து நம்மை வெட்டி சாய்க்கும் கோடாரிக் காம்புகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆலய வழிபாட்டில் நம் மந்திரங்கள் மட்டும் போதாது ஓதினால் போதாது. மாறாக “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க, எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க” என்று நாம் குரல் எழுப்ப வேண்டும்.
பினாங்கு இந்து சபாவின் சமூக மேம்பாட்டு சேவை நிகழ்ச்சிகளுக்கு நான் 5, 000 ரங்கிட் மானியம் வழங்குகிறேன் என்றார். பின்னர் அவர் பி 40 பிரிவைச் சார்ந்த தமிழர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு பரிசு பொருட்களை வழங்கினார்.
தீபாவளி அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வில் இந்து சபாவின் உதவித் தலைவர் டி. ராஜேந்திரன் செயலாளர் வி.குமரன் தேவர் (இந்து அறப்பணி வாரிய ஆணையர்) உதவித் தலைவர் வ.மு. மதியழகன், பொருளாளர் ஆர்.முனிஸ்வரன் சபாவின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரோடு பினாங்கு சிட்டி கவுன்சில் மேயர் டத்தோ ஐ.ஆர். ராஜேந்திரன், பினாங்கு முதலமைச்சரின் அதிகாரி திருமதி அமுதா, பி பி பி கட்சியின் தலைவர் டத்தோ லோகபாலா மோகன், இந்து சபா தலைவர் பரஞ்சோதி, இந்து இயக்கத் தலைவர் டத்தோ பி. முருகையா, ஆனந்த பவன் உணவகத்தின் உரிமையாளர் டத்தோ வி. ஹரி கிருஷ்ணன், பெண்கள் மேம்பாட்டு சமுக வளர்ச்சி அமைச்சர் லிம் யுய் இங் அவருடைய உதவியாளர் ஆகியோர் வருகை தந்தார்கள்.
நூற்றுக்கும் அதிகமானவர் கலந்து கொண்ட இந்த தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
