தேனிசைத் தென்றல் ஓய்ந்ததோ?

தேனிசைத் தென்றலே
திடீரென்று ஏன் மௌனமானாய்? தமிழர் இதயங்களில்
தித்திக்கும் இசையை
எத்திக்கும் விதைத்தவனே!

உன் விரல்கள் மீட்டிய
சொர்க்க இசையில்
எத்தனை இதயங்கள்
விண்ணகப் பூவாக மலர்ந்தன!
உன் மெட்டுகள் தந்த மகிழ்ச்சியில்
எத்தனை துயரங்கள் மறைந்தன!

காதலுக்குக் குரல் கொடுத்தாய் கனவுக்கும் பெருமை சேர்த்தாய்
எளிய மனிதர்களின் உணர்வுகளை உன் குரல் இசையால்
வானோக்கி உயர்த்தினாய் ..

‘சலோமியா’ பாடல்
உன் ஒய்யாரக் குரல்
என் இதயத்தில் ஒலிக்கிறது
உன் பாடல்கள் உலக திசைகளை
மயக்கத்தில் ஆழ்த்தியது..

உன்னை நினைத்து
கவலைப்படுகிறோம்…
‘கவலைப்படாதே சகோதரா’
என நீ பாடுகிறாய்..

இசையெனும் வானத்தில்
நீ இறைவன் படைத்த விண்மீன்
உடலெனும்
கூட்டைவிட்டுப் பறந்த நீ
உன் இசையை எங்கள்
இதயத் துடிப்பாக செய்தாய்..

தேவா.. தேனிசைத் தென்றலே
தெவிட்டாத அமுதுமே
நீ மறைந்த செய்தி
நெஞ்சுக்குள் இறங்கிய இடி ..

சாவது நிச்சயம்!
நீ சாகவில்லை..
உன் இசை
சாகாமல் ஒலிக்கிறது..

தென்றல் ஓய்ந்ததும்
குளிர்ச்சி மறைவதில்லை
தேவா நீ மறைந்தாய்
உன் கானா இசையை
எங்கள் இதயங்களில் நிறைத்தாய்!

-சத்யா பிரான்சிஸ்

பகிருங்கள்: