22 அக்டோபர் 2026, தேசிய தரவுப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, அரசுப் பணியாளர்கள் தங்களது உத்தியோகபூர்வ பணிகளை மேற்கொள்ளும்போது Waze வழிகாட்டிச் செயலியைப் பயன்படுத்தத் தடை விதித்துவிட்டு, அதற்குப் பதிலாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட TuJu வழிகாட்டிச் செயலியை அரசாங்கம் தீவிரமாக ஊக்குவிப்பது குறித்து திரு சந்திர சேரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Waze செயலியைப் பயன்படுத்துவதால் தேசியப் பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயங்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் என்னென்ன உறுதியான ஆதாரங்கள் உள்ளன என்பதையும், TuJu செயலியை உருவாக்குவதற்கு எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது என்பதையும் அரசாங்கம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
தேசிய தரவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதை ஏற்றுக்கொண்ட அவர், இருப்பினும், நீண்டகாலமாகப் பயன்படுத்தி வரும் வழிகாட்டிச் செயலியை மாற்றுமாறு அரசுப் பணியாளர்களைக் கேட்டுக்கொள்ளும் அரசாங்கம், அத்தகைய முடிவை எடுப்பதற்கான காரணங்களையும் போதுமான ஆதாரங்களையும் தெளிவாக விளக்க வேண்டும் என்றார்.
மேலும், Waze செயலியின் பயனர்களுடைய தரவுகள் மலேசியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கோ அல்லது அந்தச் செயலியில் குறிப்பிட்ட தரவுக் கசிவு அபாயம் இருப்பதற்கோ அரசாங்கத்திடம் உறுதியான ஆதாரங்கள் உள்ளனவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
திரு சந்திர சேகரன்
இன்று வெளியிட்ட அறிக்கையில், நேற்று இரவு TuJu வழிகாட்டிச் செயலியைத் தாமே பயன்படுத்திப் பரிசோதித்தபோது, அதில் மலாய் மொழி இலக்கணப் பிழைகள் ஏராளமாக இருப்பதைக் கண்டதாகத் தெரிவித்தார். இதனால், அந்தச் செயலியின் மொழித் துல்லியம் குறித்து தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று காலை TuJu செயலியின் இடங்களைத் தேடும் வசதியை மீண்டும் பயன்படுத்திப் பரிசோதித்தேன். அப்போது சில இடங்களைச் சீராகத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. குறிப்பாக, ஜொகூர் மாநிலத்தில் உள்ள லாயங்- லாயங் பகுதியைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒருவேளை செயலி முடங்கியிருக்கலாம்; நீண்ட நேரமாகச் சுழன்று கொண்டே இருந்தது, ஆனால் அந்த இடத்தைக் கண்டறிய முடியவில்லை.”
ஒரு வழிகாட்டிச் செயலியின் அடிப்படைத் தேவைகள், பயனர்கள் தங்களது இலக்கிடங்களைத் துல்லியமாகத் தேடிக் கண்டுபிடிக்க உதவுவதும், நம்பகமான வழித்தடங்களை வழங்குவதும்தான் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டிலேயே உள்ள நகரங்களைக் கூடச் சீராகக் கண்டறிய முடியாத நிலையில், அந்தச் செயலியைப் பயன்படுத்துமாறு அவசரமாக ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் முதலில் அதன் செயல்திறனையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசியப் பாதுகாப்பு என்ற காரணத்தை முன்வைத்து Waze செயலியைத் தடை செய்யும் அரசாங்கம், அதற்கான உறுதியான ஆதாரங்களையும் TuJu செயலியின் மேம்பாட்டுக்காகச் செலவிடப்பட்ட நிதி விவரங்களையும் பொதுமக்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என முன்னால் வேட்பாளரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் வலியுறுத்தியளர்.
இது சமூக ஆர்வலர் திரு. சந்திர சேகரன் ஆறுமுகம் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.
