தீபாவளியை முன்னிட்டு 54 இலட்சம் பேருக்கு RM1.1 பில்லியன் STR உதவி – பிரதமர் அன்வார் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 54 இலட்சம் பயனாளிகளுக்கு மொத்தம் RM1.1 பில்லியன் மதிப்பிலான நான்காம் கட்ட ரஹ்மா பண உதவித்தொகையை (STR) MADANI அரசு இன்று முதல் நவம்பர் 6, 2026 வரை கட்டம் கட்டமாக வழங்கவுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் நடைபெற்ற தீபாவளி மெகா பஜாருக்கு நேரில் சென்ற பிரதமர், அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து பண்டிகைக்கான ஏற்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கலந்துரையாடினார்.

இந்த உதவித்தொகை தீபாவளியைக் கொண்டாடத் தயாராகும் குடும்பங்களின் செலவுச் சுமையைக் குறைக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, இந்திய சமூகத்தைச் சேர்ந்த 6.3 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளும் இதில் அடங்குவர்.

மேலும், STR மற்றும் அடிப்படை ரஹ்மா உதவித்திட்டம் (SARA) ஆகியவை தேவைப்படும் மக்களைச் சென்றடைவதை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பகிருங்கள்: