புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே சண்டையா? அது 2023 சம்பவ வீடியோ என போலீஸ் விளக்கம்

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-8 – புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே நடந்ததாகக் கூறப்படும் சண்டை தொடர்பான வீடியோ, நேற்றையச் சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என பினாங்கு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவிய அந்த வீடியோ, உண்மையில் 2023 ஆம் ஆண்டில் பதிவுச் செய்யப்பட்ட பழைய காட்சியாகும்.

நேற்று அப்படி ஒரு எந்த விரும்பத்தாகத சம்பவமும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவில்லை என மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.

நேற்று காலை அங்குள்ள முனீஸ்வரர் கோவிலில் வருடாந்திர திருவிழாவும் இரவில் இரத ஊர்வலமும் பொது மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அமைதியாக நடைபெற்று முடிந்ததாக அவர் சொன்னார்.

எனவே, பழைய வீடியோக்களை மீண்டும் பரப்பி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த வைரல் வீடியோவை, சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தும், அவரைச் சார்ந்த சிலரும் முன்னதாக சமூக ஊடகங்களில் பதிவேற்றி தகாத வகையில் பேசியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *