மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்றம்: இன்னும் பெரிய தாக்குதல் காத்திருப்பதாக ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரான் மன்னிப்புக் கோரிய பின் துபாய், டோஹாவில் மீண்டும் வெடிப்புச் சத்தம்

துபாய், மார்ச்-8 – மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் மற்றும் கட்டார் தலைநகர் டோஹாவில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வளைகுடா பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில விமானச் சேவைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதல்கள் தொடர்ந்தால் ஈரானுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், ஈரானோ தனது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முன்பு நடந்த தாக்குதல்களுக்கு பதிலடி மட்டுமே என்றும், தெஹ்ராக்கு எரிரான தாக்குதல்களில் சம்பந்தப்படாத வரை வளைகுடா நாடுகளை குறிவைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

என்றாலும், அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளில் ஒரு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *