டீசல் ஏற்றுமதி குற்றச்சாட்டு தவறான புரிதல் அரசின் விளக்கம் வெளிப்படையானது

பிலிப்பைன்ஸுக்கு மலேசியா டீசல் ஏற்றுமதி செய்ததாக பரவிய குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அரசாங்கத்தின் விளக்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வழங்கப்பட்டுள்ளதாக ஹுலு ராஜாங் KEADILAN கிளைத் தலைவர் செனட்டர் அபுன் சுய் அன்யிட் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக பரப்பப்பட்ட தகவல்கள் உண்மையில் கப்பல் சரக்கு மாற்று செயல்முறையைப் (transhipment)பற்றிய தவறான புரிதலால் ஏற்பட்டவை என்றும் அவர் கூறினார்.


அரசாங்கத்தின் விளக்கமும் பிலிப்பைன்ஸ் தரப்பிலிருந்து கிடைத்த தகவல்களும், பரவிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.


முன்னதாக, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில், சமூக ஊடகங்களில் பரவிய டீசல் ஏற்றுமதி குறித்த குற்றச்சாட்டை மறுத்து, அந்த எரிபொருள் மலேசியாவுக்குச் சொந்தமானது அல்ல என்றும், சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Vitol என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *