புசிங், நவம்பர் 2 : பத்து காஜா நாடாளுமன்றத் தொகுதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி திருவிழா 2026, அக்டோபர் 31ஆம் தேதி மற்றும் நவம்பர் 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் புசிங் மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி. சிவகுமார் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார்.
அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் இலவச உணவு மற்றும் பானங்கள், கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் 40 பரிசுகளைக் கொண்ட அதிர்ஷ்டக் குலுக்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மேலும், அதிர்ஷ்டக் குலுக்கலில் முதல் பரிசாக RM1,500, இரண்டாம் பரிசாக RM1,000 மற்றும் மூன்றாம் பரிசாக RM500 வழங்கப்பட்டன.
தொடர்ந்து, நவம்பர் 1ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தீபாவளியை முன்னிட்டு சிறப்பு நலத்திட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.



