அக்டோபர் 28 – மலேசியாவுக்கான புதிய இந்திய உயர் ஆணையர் சோம்நாத் கோஷ், பெர்லிஸ் மன்னர் துவாங்கு சையத் சிராஜுதீன் ஜமாலுல்லைல் மற்றும் ராணி துவாங்கு தெங்கு ஃபௌசியா ஆகியோரை அராவ் அரண்மனையில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுக்கும் பெர்லிஸ் மாநிலத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதில் இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் பெர்லிஸ் மாநிலத்துக்கும் இடையிலான உறவு, 1961ஆம் ஆண்டு மலேசியாவின் மூன்றாவது மாமன்னரான மறைந்த துவாங்கு சையத் புத்ரா ஜமாலுல்லைல் இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் மூலம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.
இந்நிகழ்வில் பெர்லிஸ் இளவரசர் துவாங்கு சையத் ஃபைசுதீன் புத்ரா ஜமாலுல்லைல், இளவரசி துவாங்கு டாக்டர் ஹாஜா லைலத்துல் ஷரீன் அகாஷா கலீல் உள்ளிட்ட அரச குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
படம் : ISTANA ARAU
